Thursday, October 18, 2007

கறுப்பு மாதம்

ஒன்டாறியோ வாவியின் தெற்கு பபிரதேசமானகிறிம்ஸி பகுதியில் வைத்து எனதுவாகனம் பழுதுபட்டதன் நிமித்தம் அந்த பகுதியெங்கும் ஒரு நாளெல்லாம் அலைந்துதிரியவேண்டிவந்தது. அங்கு நிறைந்திருக்கின்ற திராட்சைத் தோட்டங்களில் வேலைசெய்கிறவர்களை பார்க்கின்ற போது அந்னியமும், சூழல் மாறுபாடும் தோற்றமயக்கத்தை ஏற்படுத்தியது. காரணம், தனி வெள்ளையர்பிரதேசமானஅங்கு வேலை செய்பவர்களெல்லாம் கறுப்பினத்தவர்களாக இருந்தார்கள். நான்அவர்களுடன் பேச, தயக்கத்துடன் என்னிடம் பேசினார்கள்.

“காலை ஐந்து மணிக்கு வேலை ஆரம்பமானால் இரவு எட்டுமணி வரை தொடரும். பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்துஅக்டோபர் கடைசி வாரம் வரை வாரத்தில்ஏழு நாட்களும் வேலை. பண்ணையின்ஒதுக்குப்புறமாக இருக்கும் கன்டைனருக்குள்தான், கடும் குளிரிலும், கொடும்வெயிலிலும், எங்கள் உறக்கம். ஒருகோப்பி குடிக்கவும், கூட வேலை செய்பவனிடம் சிரித்துப்பேசவும் தடை. இத்தனையையும் உறுத்து, நாங்கள் ஏழு மாதத்தில்பெறுகிற சம்பளம் - மூவாயிரம் டாலர்கள்.”
“எங்கள் காலிலிருந்து எழும்புகின்ற‘சிலீங்’, ‘சிலீங்’ சத்தம் மட்டும் தான் இல்லாமல் போய் இருக்கிறது. மற்றபடி அறுநூறு ஆண்டுகளாக எங்கள் வாழ்க்கைமாறவேயில்லை.”அவர்கள் வேதனை திராட்சை ரசத்தின் சுவையில் கலந்திருந்தது.

அந்த திராட்சை தோட்டங்களில்வேலை செய்பவர்கள் எல்லோரும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜமேக்காவில்இருந்து கூலிகளாக இறக்குமதி செய்யப்படுகின்ற கறுப்பினத்தவர்கள். முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய கரும்புக் காட்டு சோகம், பலதலைமுறைகளை கடந்தும் இன்னமும் அவர்களை விட்டகலவில்லை.

துப்பாக்கிகளோடு ஆப்பிரிக்காவிற்குவெள்ளையர்கள் போன நாளில் இருந்துகறுப்பர்களின் இரத்த வரலாறு ஆரம்பமாகிறது. வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப் பட்டதாக சொல்லப்படுகின்ற அட்லாண்டிக்மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் இருக்கின்ற நாடுகளும், தீவுகளும் சங்கிலியிட்டுகட்டி இழுத்து வரப்பட்ட கறுப்பு அடிமைகளாலேயே செம்மை அடைந்தது என்பதுவும், வெள்ளையர்களின் உணவுத்தேவையும், கஜானா நிறைவும், கறுப்பர்களின் இரத்தமும், கண்ணீரும் என்பதுவெள்ளையர் சரித்திரத்தின் கறுப்பு பக்கங்கள்.
வெள்ளையர் அரசு 1838ஆம் ஆண்டில்அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தது. ஆனால் அதே அரசு, அதேஆண்டில், ஒப்பந்த முறைச் சட்டத்தைகொண்டு வந்து சங்கிலியால் பிணைக்காதஅடிமைமுறையை உலகெங்கும் பரப்பியது.

ஒப்பந்த அடிமைக் கறுப்பு கூலித் தொழிலாளிகள் அடிமை முறையில் வேலை செய்வதை நீங்கள் கோடைகாலம் முழுவதுவும்ஏiநெ டுயனெ என்று சொல்லப் படுகின்றNயைபயசய ழுn வாந டுயமந பகுதிக்கு சென்றால் பார்க்கலாம்.
எழுதாத ஆங்கிலேய சட்டங்களிலும்,வெள்ளைத்திமிர் இரத்தத்திலும் இன்னமும்கறுப்பர்கள் மீதான கொடும் பார்வைகள்நீங்கிய பாடாக இல்லை. அமெரிக்காவின்போலீஸ் மோப்ப நாய்கள் கறுப்பர்களைதுரத்தி வேட்டையாடிப் பிடிக்க கூடியமுறையிலேயே பயிற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.

இயற்கை அழிவுக்கு உட்படும் என்றுதெரிந்தும் கடல் மட்டத்தை விட தாழஉள்ளது என்று பகிரங்கமான பின்னும்அலபாமா பகுதியில் கறுப்பினத்தவர்களை குடியேற்றியதும் ‘கத்தரீனா’ அழிவுக்குபின்அமெரிக்கஅரசு நடந்து கொண்ட விதமும்மனித குரூரத்தின் பெருநிலை.
எய்ட்ஸ் கிருமிகள் மனித குரங்கில்இருந்து வந்ததல்ல. வெள்ளையர்கள்சொல்வது போன்று அது கறுப்பர்களுக்குகடவுள் தந்த தண்டனையும் அல்ல.எய்ட்ஸ் கிருமி அமெரிக்காவின் ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரியல்ஆயுதம். அக்கிருமியினை தடுப்ப+சிகளில்புகுத்தி உதவி என்னும் பேரில் ஆபிரிக்கமக்களிடம் பரிசீலித்து விட்டது அமெரிக்கா,என்னும் குற்றச்சாட்டைச் சொன்னவர் 2004ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கறுப்பின பெண்ணான வங்தாரி மாத்தாய்.

மனிதனேய அமைப்புகளும் ஐ.நா. சபையினரும் இவரது குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்தாமல் இருப்பது கறுப்பினத்தவர்மீதான அக்கறையின்மை என்று கொள்ளலாமா?
எண்ணை வயல்களினால் நைஜ்ஜீரியாவின் சுற்றுப்புறச் சூழல் நாசமாகிக் கொண்டிருப்பதை தடுக்க முற்படும் இயற்கை ஆவலர்களை வெள்ளை முதலாளிகளின்பினாமிகள் இன்றுவரை கொன்று குவித்துக்கொண்டு இருப்பதை ஏன் பச்சைப் பாதுகாப்பு இயக்கத்தினர் பெரிதுபடுத்தவில்லை.

ஆதி மனிதரை, ஆதியிலேயே நாகரிகம்கண்டவரை ஆதி அரசரை உலகின் மற்றைய குடிகள் ஏன் மதிக்க மறுக்கின்றன?அவர்கள் வாழ்விடம் இருண்ட கண்டம்என்று எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது? இத்தனையையும் செய்துகொண்டு பிப்ரவரியை கறுப்பு மாதமாக ஏன்நினைவு கூருகிறார்கள்?சரி - கறுப்பு நிற திராவிடத் தமிழர்மனதில் என்ன நினைத்துக்கொண்டு காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சென்றும்,கறுப்பானாலும் கஸ்தூரியென்றும் பழமொழி சொன்னார்கள்?

2 comments:

கறுப்பி said...

வருக வருக

எட்டிப்பாத்தன் தெரிஞ்ச முகமா இருந்துது. மன்னிக்க வேண்டும் வாசிக்க நேரமில்லை. இருக்கும் போது வாசித்து விட்டு கருத்தை எழுதுகின்றேன்

சூனிய பிரதேசம் said...

vanakkamunka karuppi

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது