Tuesday, October 23, 2007

வெள்ளைவானில் வராத, இனம் தெரியாதோர்.

நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலைப்போல், இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலும் ஈழப்போராட்டத்தில் பெரு நீளமானது. உணவில் நஞ்சு கலந்து உண்ணக் கொடுத்து கொலை செய்ததும், உறக்கத்தில் சுட்டுக் கொன்றதும், பேச வா, என அழைத்துச் சென்று பற்றைக்குள் கொலைசெய்து போட்டுவிட்டு சென்ற கொடூரமான நண்பர்களை கொண்டது எங்களது போராட்டப்பாதை. சாகப்போகிறவனுக்கு கூட தனது அடையாளத்தை காட்டக்கூடாது என முகமூடி அணிந்து கொலை செய்து சென்ற நண்பர்களைப்பற்றி யாராவது ஒருத்தரேனும் பதிவு செய்துதானே ஆகவேண்டும்.

நட்பு பற்றி பேசவும், அரசியல் நேர்மை பற்றி கதைக்கவும் யோக்கியம் அற்ற ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்னும் போதில், எனது எல்லா தமிழ் அடையாளங்களையும் அழித்து விட்டு, இன்னும் தொலைதூரம் சென்று விடலாமோ என்றிருக்கிறது.

இருநாட்களுக்கு முன்பு தேனி இணையத்தளம், இனம் தெரியாதோரால் எழுதப்பட்ட விமர்சனம் பாணியிலான ஏதோ ஒன்றை பிரசுரித்திருக்கிறது. சின்னத்தம்பியும், சவரித்தம்பவரும் சம்பாசிக்கின்றார்களாம். சரி என்னதான் சம்பாசிக்கின்றார்கள் என தலைநிரம்ப வலியுடன் படித்து முடித்தால் ஆயாசம்தான் ஏற்படுகிறது. தங்களை முற்போக்காளர்களாகவும், தலித் விடுதலையாளர்களாவும், பாசிசய எதிர்பாளர்களாகவும், பேசிக் கொள்பவர்களால் எழுதப்பட்ட யாவும், மூடக் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கடைப்பிடித்துக் கொண்டு, முகமூடியணிந்து நண்பனை கொன்று விட்டுச் செல்லும் தோழர்களையே ஞாபகப்படுத்துகிறது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் என்போரே, ஏழைகளை சிரிக்க விடாமல் செய்து கொண்டிருப்பது போல், தலித்தியம் பேசுவோரே சாதியத்தை வளத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றினை துவேசிப்பது, மனித உரிமை மீறல் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள், புலிகளின் மனித உரிமை மீறல் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். பேராசிரியர் சிவத்தம்பியும், புலிப்படையின் தலைவர் பிரபாகரனும் குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தார்கள் என்பதற்காக பன்நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்றை விமசிப்பதுவும் அதனது சாதாரண செயல்கள் யாவற்றையும் உள்ளர்த்தத்துடன் பார்ப்பதுவும், சாதித்தடிப்பேயன்றி வேறல்ல.



சுயவிமர்சனம் செய்து கொள்ளும் மேம்பட்ட சமூகம் ஒன்றை உருவாக்குவதில் உற்சாகம் உடைய நான், சேரனும், செல்வமும், சிவத்தம்பியும், சிவசேகரமும், தாலியசும் விமர்சனத்துக் அப்பார்பட்டவர்கள் என்னும் கருத்தை கொண்டவனல்ல . எவரும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட கூடியவர்கள்தான். ஆனாலும் விமர்சகர் அதுக்கான தகுதி உடையோர்தானா என்பது எமது வலிமையான கேள்வியல்லவா? தேனியின் இனம்தெரியாத எழுத்தரால் விமர்சிக்கப்பட்ட இவர்கள் எவரும் ஆயுதங்களுடன் இருப்பவர்கள் அல்ல. பாடம் சொல்லிக் கொடுப்பவர்களும், புத்தகம் விற்பவர்களும்தான். இவர்களை விமர்சிப்பதற்கே முகமூடி போடும் இவர்கள்தான், புலிகளின் பாசிசத்தை எதிர்த்து போராடப் போகிறார்களாம்…! (போங்கடா டேய்)

புலிகளில் இருந்து, புளுகு ரேடியோக்காரன் வரை நான் விமர்சித்து இருக்கிறேன். சரி பிழைக்கப்பால் எனக்கு தோன்றிய எண்ணங்கள் யாவற்றையும் இரண்டாம் திருத்தம் இல்லாமல் எனது சொந்த அடையாளத்துடன் இடம் கிடைக்கும் இடம் எங்கும் எழுதியிருக்கிறேன். முகமூடியணிந்த முதுகெலும்பில்லாத மொட்டைச் சுவர் எழுத்தானர்களால் விமர்சிக்கப்படுவர்கள் பாதிக்கப்படுகின்றார்களோ என்னமோ, நான் உளரீதியாக உடைந்து போய் விடுகிறேன்.

இயல்பாய் வாழ்பவர்களையும், சித்தன் போக்கில் செல்போர்களையும் விமர்சிப்பதற்கு ஏன் கள்ளப்பெயர் பயன்படுத்தப்படுகிறது என துளாவினால் கிடைக்கும் பதில் சுவாரஸ்யமானது. புலிகளை பாஸிஸ்டு என்பவன் புலிகளின் நிறுவனம் ஒன்றில் சம்பளம் பெறுபவனாக இருக்கிறான். பக்கா யாவாரி என விமர்சிப்பவன் பல இலட்டம் முதலீட்டில் முதலாளியாக இருக்கின்றான். ஒழுக்கவியல் சொல்வன் பெண்களுக்கு எதிராய் துண்டு பிரசுரம் விட்டவனாக இருக்கிறான். மனித உரிமை பேசுபவன், இலங்கை அரசிடம் ஊதியம் பெறுபவனாக இருக்கிறான். இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால் இம்முகமூடி விமர்சகர்கள் யாரை விமர்சிக்கின்றார்களோ அவர்களின் உதவியும் அனுசரணையும் ஏன்றேனும் தேவைப்படும் என்னும் எண்ணமே தங்கள் அடையாளங்களை மறைக்கின்றார்கள் என்பது அபத்தமான உண்மையாகவும் இருக்கிறது.

எது எப்படியாயினும் இவைபோன்ற பொறுப்பற்ற விமர்சனங்கள், நேர்மையற்ற அரசியல் சூழல் கொண்ட இக்காலத்தில் விபரீதத்தையே கொண்டு செல்லும். அடையாளம் தெரியாத எழுத்தாளரகள் போல்;, ஆயுததாரிகளும் எல்லா இடங்களிலும் இருக்கின்றார்கள். சுடுவது ஒன்னைத்தவிர வேறு எதுவுமே தெரியாத அவர்களுக்கு நாளுக்கு ஒரு எதிரி வேண்டும். இது போன்ற பொறுப்பற்ற ஆள்காட்டி விமர்சனங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதும் நிறுத்தப்பட வேண்டியதும் ஆகும்.

தனிப்பட்ட காழ்ப்போ, அன்றி வேறு என்ன காரணமாக இருந்தாலும் அடையாளம் தெரியாதோரால் எழுதப்பட்டவைகளை ஏனோ இந்த இணையங்கள் போட்டுத்தொலைக்கின்றனவோ தெரியாது. எழுதுவன்தான் மூளையை அவிழ்து பெயர்தெரியாத மர பொந்துக்குள் வைத்துவிட்டான் என்றால், போடுகிறவனும் எங்கே அவிழ்த்து வைத்தானோ புத்தியை.

Thursday, October 18, 2007

கூரிய கருவியும், குரங்கும்.

மனித இனம் அல்லாத மற்றய உயிரினங்களுக்குள் குரங்கினம் மட்டுமே கருவிகளை கையாளும் வல்லமை உடையன. ஆழமாக புதைந்திருக்கும் கிழங்கு வகைகளை தோண்டி எடுப்பதற்கு கம்புகளையும், கடினமான கோதுகளை உடைய விதைகளை உடைப்பதற்கு கற்களையும் கருவியாக குரங்குகள் உபயோகிக்கின்றன. இதனை அறிந்த பிற்பாடு, ஆய்வு கூடத்தில் கத்தி போன்ற கூரிய ஆயுதம் அவைகளிடம் கொடுத்து ஆய்வு செய்திருக்கின்றார்கள் விலங்கியலளர்கள். ஆய்வின் விளைவு விபரீதமாகியிருந்தது. கத்தியை கையாளத்தெரியாமல் தன்னையும், கூண்டுக்குள்ளிருந்த இதர பிராணிகளையும் காயப்படுத்தியிருந்தன அவைகள். கல்லையும் கம்பையுமே கருவியாக கையாளும் முறைமட்டுமே குரங்குகள் அறியும். இதர கருவிளை பயன்படுத்தும் அளவுக்கு அவை பரிணாமம் அடையவில்லை.

குரங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கு கூட இவ்வுதாரணம் பொருந்தவே செய்யும். தெரியாத, அல்லது பயிற்றப்படாத துறை ஒன்றை கையாள்கையில், அதுவும் சமுகம் சார்ந்த விடயமெனில் பக்கவிளைவுகள் பல ஆண்டுகளுக்கு இருக்கும். கட்டடம் கட்டுவதில் மட்டுமே வல்லவரான இஞ்சினியரை கொண்டு வந்து சமூகத்தை கட்டமைக்கச்சொன்னால் விளைவு என்னவாகும் என்பதை எமது மக்கள் பகுத்தாய்ந்து உணர முடியாத பேதமையானவர்கள். ரோராண்டோ தமிழ்ச்சூழலில், சமூகத்தை செப்பனிடக்கூடிய கருவிகள் சில உரியவர்களிடத்தில் இல்லாது இருக்கிறது. எவர்கையில் எவையெவை இருக்ககூடாதோ அவையாவும் அவர்களிடத்திலிருப்பதுவே தமிழர்களின் பொது விதியாகிப்போனது.

கடந்த மாதத்தில் ஒரு நாள் நண்பர்களிடம் உரையாடிவிட்டு வீடு திரும்பும்போது பொழுது பின்னிரவாகியிருந்தது. வாகனத்திலிருந்த அனைத்துப்பாடலும் கேட்டுத்தீர்ந்து போயிருந்ததால், தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, அரசியல,; தேசியம், வாழ்வியல் போன்ற இன்னோரன்ன அடையாளங்களை பிரதினுத்துவப்படுத்தும்; பண்பலை வானொலியை இயங்கவிட்டேன். அவ் அகாலப் பொழுதில் கலந்துரையாடல் பாணியில் ஆபாசமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். உற்றுக்கவனித்தபோதுதான் விபரீதம் புரிந்தது.

நேயர்களின் பாலியல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு வானொலி நிலையத்தில் இருந்து விடை பகிரப்பட்டுக்கொண்ருந்தது.

பாலியல் சந்தேகங்களுக்கும், பிரச்சனைகளுக்கம் தீர்வுப்பொதி வழங்கிக்கொண்டிருப்பவர்கள் அத்துறையில் பாண்டித்தியம் பெற்றவர்களோ, உளவியலாளர்களோ, அன்றி மருத்துவரோ அல்ல. காய்கறி சந்தையில் கூவிக்கூவி விற்பனை செய்யமட்டுமே தெரிந்த இரு நபர்கள். நேயர்களின் பாலியல் சந்தேகங்களுக்கு ஆலோசனை சரியான முறையில் வழங்கப்படுகிறதா என கவனித்தபோது அருவருப்பான ஆபாச பேச்சே தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது. வெகு விரைவில் மக்களை சென்றடையக்கூடி வானொலி ஊடகத்தை இத்தனை தூரம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை காண்கையில் பரிணாமம் அடையாத குரங்கின் கையில் கொடுக்கப்பட்ட கூரிய கருவியே அடையாளமாக தெரிகிறது.

ஆண் பெண், பெண் பெண், ஆண் ஆண் ஊடல் உறவுக் காட்சிகளையும் கூட்டுக்கலவியையும் விதம் விதமாகவும,; அதிநவீன உத்திகளையும் காட்டும் நீலப்படம் ஓடுவதற்கு முன்பு இப்படியொரு அறிப்பு வரும். “ இவை யாவும் பார்த்து ரசிக்கமட்டுமே. இங்கு காட்டப்படும் உத்திகள் எதனையும் முயன்று பார்க்க வேண்டாம். சில முறைகள் ஆபத்து நிறைந்தவை.”

நீலப்படம் எடுப்பவர்களுக்கு, சமூகம் மீதிருக்கும் அக்கறைகூட, எங்கள் பண்பலைக்காரருக்கு தமது மக்கள் மீதில்லாதிருக்கிறது. எந்தவிதமான முன் அறிவுப்பும் இல்லாமல் வருவதால் இவர்கள் வழங்குகின்ற ஆலோசனைகள் யாவும் உண்மைதான் என நம்புகின்ற தோற்றத்தை பொதுப்புத்தி மட்டத்தினருக்கு ஏற்படுத்திவிடும் என்பதில் எந்தச்சந்தேகமும் வேண்டியதில்லை.
ரேடியோவில் கதைக்கிறவங்கள் எல்லாம் சரியா அறிவாளியாத்தான் இருப்பார்;கள் என நம்கின்ற போக்கு நம்மவர்களுடையது.

ஓட்டப்பந்தையத்தில் முன்னுக்கு ஓடிக்ககொண்டிருப்வன்தான் முன்னோடியென பலவந்தமாக நம்பகைவக்கப்பட்டிருக்கிறார்கள் நமது மக்கள். கேள்வி கேட்கவும், மறுபரீசிலனை செய்யவும், சிந்திக்கவும் விருப்பப்படாத சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதில் ரொரன்டோ தமிழ் ஊடகள் சில பெரு முயற்சியில் ஈடுபடுகின்றனவோ? என எனக்கெழும் சந்தேகம் வலுப்பெற்றுக்கொண்டே செல்கிறது.

பிள்ளையார் நாமம் ரச்சிக்கப்படுவதாக.

ரோமானிய பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி
செய்து கொண்டிருக்கிறார் என ய+தர்கள்
நம்பிய யேசு கிறிஸ்துவிடம் அவரை மடக்
குவதற்காக சென்றவர்கள். அரசனுக்கு வரி
கொடுக்கவேண்டுமா எனக் கேட்கின்றனர்.
யேசுவினுடைய பதிலைப் பொறுத்து
அவரை கோவிலுக்கெதிராகவோ அல்லது
அரசனுக்கெதிராகவோ மாட்டிவிடலாம் என
எதிர்பார்க்கின்றனர். ஆனாலும் கிறிஸ்து
அரசனுக்கு கொடுக்க வேண்டியதை அர
சனுக்கு கொடு, கடவுளுக்கு கொடுக்க
வேண்டியதை கடவுளுக்கு கொடு என்கி
றார், பூடகமாக.

கிறிஸ்துவுக்குப்பின் விவிலியத்தை எழு
தியவர்கள் இந்தப் பகுதியினூடாக அரச
னுடன் பகைக்கவேண்டாம் என்ற பொருளி
லேயே இந்தப்பகுதிக்கு அழுத்தம் தந்து
எழுதியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனை நான் எப்படி மொழிபெயர்த்து
விளங்கிக் கொண்டேன் என்றால், அர
சனுக்கு உரிய வரியை அரசனுக்கு
கொடுக்க வேண்டும். கோயிலுக்கு உரிய
தானத்தை கோயிலுக்கு கொடுக்க வேண்
டும் என்று. இப்பந்தி யேசு காவியமல்ல,
பிள்ளையார் புராணம் என்பதால் மேற்
கொண்டு தொடராது நிற்க.

ரொராண்டோ பெரும் பாகத்திலிருக்
கின்ற சில தமிழ் சைவ திருத்தலங்கள்
கோயிலின் பெயரால் தானத்தைப்
பெற்றுக்கொண்டு அரசருக்கு வழங்க
வேண்டிய வரியை ஏய்ப்பதற்கு வழி செய்து
தருகின்றன. இத்தகவல் எம் போன்ற மத
அடையாளம் தவிர்த்தவர்களுக்கு புதிதா
கவும் ஆச்சரியமும் தருவதாகவும் இருந்
தாலும், பெரும்பான்மை பக்தகோடிகள் இத்
திட்டத்தால் பயனடைந்து கொண்டுதானிருக்
கிறார்கள்.

தொண்டு நிறுவனமாகவும், இலாபம்
அற்ற அமைப்பாகவும் பதிவு செய்யப்பட்
டிருக்கும் கோயில்கள், தங்களுக்கு வழங்
கப்பட்டுருக்கும் வரிச்சலுகைகளை பயன்ப
டுத்தி வரி ஏய்ப்பு செய்வது மட்டுமல்லா
மல்லாமல், வாடிக்கை பக்தர்களிடம் சிறி
யதொகையை பெற்றுக்கொண்டு பெரிய
தொகையை அரசிடமிருந்து மீளப்பெற்றுக்
கொள்ளவும் வரிச் ரசீதுகள் வழங்குகின்
றன.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோயில்
கள் பற்றி சர்ச்சை எழுந்தபோது, கோயில்
நிர்வாகி ஒருவருடன் விவாதம் பண்ண
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வாதம்
முற்றிய நிலையில் கோபம் கொண்ட அவர்
அனேக கோயில்கள் இங்கு நட்டத்தில்தான்
ஒடிக்கொண்டிருக்கிறதென்று உமக்கு தெரி
யுமா என்றார். அப்டியானால் வியாபாரத்தை
மாற்றலாமே என்று நான் சொன்னதும்
என்னுடன் பேச்சை துண்டித்துக்கொண்டார்.
ஆலயம் என்பதன் உண்மை அர்த்தம்
தான் என்ன? வரம் பெற்றுக்கொள்கின்ற
இடமா? ஆன்மா கூடும் இடமா? கூட்டுப்
பிரார்த்தனை செய்யுமிடமா? அன்னதானம்
கிடைக்குமிடமா? பாபமும் கறுமமும்
போக்குமிடமா? தியானம் செய்யுமிடமா?
அல்லது நட்டத்திலோ லாபத்திலோ
ஒடிக்கொண்டிருக்கும் வியாபார நிலையம்
தானா?

கோயில்கள் பற்றிய சர்ச்சை என்பது
நேற்று இன்றானதல்ல. கோயில்கள் தோன்
றிய காலம்தொட்டே கோயில்கள் மீது
காட்டமான விமர்சனமும் கேள்விகளும்
இருந்து கொண்டே இருக்கின்றன. புத்தர்,
யேசு, திருமூலர், தமிழில் இருந்த அனேக
சித்தர்கள் உட்பட அனேகம் அறிஞர்கள்
கோயில் எதிர்ப்பாளர்களே. ஆனாலும்
புதிய புதிய மதங்களும் கோயில்களும்
எழுந்தன. எழுந்த வண்ணமே இருக்கின்
றன.

ஹரிநாத், பத்ரிநாத் போன்ற இமால
யத்தலங்களில் பெரிய கோடீஸ்வரர்கள்
அங்கு அலைந்து கொண்டிருக்கும் ஆயி
ரக்கணக்கான ஆண்டிகளுக்கு, நாள்
தோறும் உணவும் கம்பளிப் போர்வையும்
ட்ரக் வண்டிகளில் கொண்டுவந்து கொடுப்
பதை பார்த்திருக்கிறேன். தங்கள் பாவத்
தைப் போக்க இதுவே வழியென்பது அவர்
களது நம்பிக்கை. ஆஸ்திகர்களே கோயில்
என்கிற தங்களது கற்பிதம், கருத்தியலுக்
கப்பால் தங்களது பிரார்த்தனைக்கு பிள்
ளையாரே வரிப்பணம் மீளக் கொடுத்தார்
என்று நம்புவதுமே புதிய புதிய கோயில்கள்
தோன்றுவதற்கான அழுத்தமான முதற்கார
ணங்கள்.

கனடாவின் மாவீரர் நாள்- நவம்பர் 11

இறந்தவர்களை அவமதித்ததாக சில
ஜெர்மனிய இராணுவத்தினர் மீது வழக்கு
தொடுக்கப்பட்டதாக சில தினங்களுக்கு-13-
முன்பு செய்திகள் சொல்லப்பட்டன. ஆப்
கானிஸ்தானில் இருக்கின்ற சில ராணு
வத்தினர் மண்டை ஓட்டை வைத்து உதை
பந்தாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு. போர்
களத்தில் பிடிபடுகின்ற எதிரியை கௌர
வமாக நடத்துவதும், கைப்பற்றப்படுகின்ற
எதிரியின் உடல்கள் கௌரவமான முறை
யில் பாதுகாத்து எதிர்தரப்பினரிடம் கைய
ளிப்பது அல்லது இறுதிச்சடங்கு நடத்தப்பட
வேண்டும் என்பதுவும் யுத்தவிதி.

இலங்கையின் யுத்த வரலாற்றில் கைப்
பற்றப்படுகின்ற எதிரியின் உடல்கள் கௌர
வமான முறையில் ராணுவ மரியாதையுடன்
அடக்கம் செய்யப்படுகின்றனவா, என்னும்
கேள்வி எம்மில் யாருக்கேனும் இருக்கி
றதா?

அண்மையில் முகமாலைச்சண்டையில்
உருக்குலைந்த சிங்கள இராணுவத்தினரின்
சில உடல்களை இராணுவமரியாதையுடன்
அடக்கம் செய்ததாக புலிகளின் இராணுவப்
பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தி
ருந்தார். அதே போன்று விடுதலைப் புலி
களால் பொறுப் பேற்கப்படாத சில உடல்
களை, கருணா பிரவினரும் இராணுவ மரி
யாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதாக
அவர்கள் சார்பு ஊடங்களில் படிக்க முடி
ந்தது. இவைகள் யாவும் செய்திகள் தான்
அன்றி, ஆதார ப+ர்வமாக காண்பிக்கின்ற
வீடியோ காட்சிகளோ, அன்றி புகைப்பட
ங்களோ, டிஜிடல் படங்களோ எவரும் இது
வரை வெளியிட்டதை நான் பார்க்க
வில்லை. இது எனது பார்வையின் குறை
பாடா, அல்லது உண்மையிலேயே காட்சிப்
படங்கள் இல்லையோ தெரியாது.

விடுதலைப்புலிகளால் கைது செய்யப்
பட்ட, எண்ணிக்கையில் குறைவான மிகச்
சில ராணுவத்தினர் அரசிடம் மீள ஒப்ப
டைக்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்கள்
ராணுவ கைதியாகவே கருதப்பட்டு நாகரீக
முறையில் நடத்தப்பட்டதாக சாட்சியங்கள்
ஆதார ப+ர்வமாக சொல்கின்றன. சம்பந்
தப்பட்ட ராணுவத்தினரே வாக்குமூலம் தரு
வதால் நம்பியே ஆக வேண்டும்.

இவையாவும் ஒரு புறம் இருக்க, களத்
தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை
குறைவாக வெளி உலகினருக்கு காண்
பிப்பதற்காக எதிரிகளால் கைப்ற்றப்பட்ட
உடல்களை பொறுப்பேற்க இரு தரப்பின
ரும் மறுத்து விடுகின்ற யுத்தநெறி முறை
யற்ற நிகழ்வுகளும் இலங்கையில் அதிகம்
தடவை நடைபெற்று இருக்கிறது.

இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட
எண்ணிக்கையில் ஐம்பதை தாண்டிய புலி
போராளிகளின் உடல்களை இணையத்த
ளம் ஒன்றில் பார்க்க நேர்ந்தது. அவர்கள்
பொது மக்கள் என புலிகள் மறுத்துவிட,
அவ்வுடல்களை இராணுவத்தின் மிகவும்
அவமதித்திருந்தனர். பெண் போராளிகளின்
ஆடைகள் அவிழ்கப்பட்டும், அவயங்கள்
தெரியும் படியாகவும் புகைப்படங்கள் எடுக்
கப்பட்டிருந்தன.

கொழும்பு பத்திரிக்கை ஒன்றினது, முன்
னாள் பத்திரிக்கை நண்பருடன் இது பற்றி
பேசிய போது, அவர் சொன்ன தகவல்
மென்மேலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.
92ம் ஆண்டில் ஆனையிறவு தாக்குதலின்
போது சிக்குண்ட நூற்றுக்கணக்கான புலிப்
போராளிகளின் உடல்கள் இராணுவத்திடம்
சிக்கியிருந்தன.
ஆண், பெண் பேதமின்றி சீருடைகள்
கழையப்பட்ட போராளிகளின் பால் உறுப்
புகள் மீது கால்கள் வைக்கப்பட்டு புகைப்
படம் எடுக்கப்பட்டிருந்தனவாம். இவைகளை
யும் தாண்டி உடல் உறவு கொள்வது
போன்று உயிரற்ற உடல்களை இணைய
வைத்து ஆடப்பட்ட குரூர விளையாட்டுக்
களும் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.
இவை அனைத்தும் தென் பகுதியில் பரபரப்
பாக அக்கால கட்டங்களில் பார்வையிடப்
பட்டன என்பது எமது வீரத்துக்கப்பாலும்
உரத்துக் கேட்கும் அவலம்.

மரணம் என்பது உணர்வு பூர்வத்தின்
எல்லை கடந்த துயரம். உடல்களை
கேலிக்குள்ளாக்குவதும் சிதைத்து விளை
யாடுவதும் போரியலின் ஒரு பகுதியென்று
தெரிந்து பின்னும், எண்ணிக்கையில் வீரம்
பார்ப்பதை தவிர்த்து, உடல்கள் உடனேயே
பொறுப்பேற்கப்பட வேண்டும். எவ் உடல்
கள் ஆயினும் மரியாதைக்குரியவையே.
உடல் என்னும் சொல்லை உடலம் என்று
விட்டால் மட்டும் மரியாதை பெற்று விடாது.
உலகை உலுக்கிய, சோழர் காலத்தை
மீள மீட்டனர் என புலம்பெயர்ந்தவர்களால்
புகழப்பட்ட காலி துறைமுக தாக்குதலில்
பலி கொள்ளப்பட்ட கடல் புலிகளின் உட
ல்கள் கூட யாராலும் பொறுப்பேற்கப் பட
வில்லை. இது மாவிரர் மாதமாம்.

கறுப்பு மாதம்

ஒன்டாறியோ வாவியின் தெற்கு பபிரதேசமானகிறிம்ஸி பகுதியில் வைத்து எனதுவாகனம் பழுதுபட்டதன் நிமித்தம் அந்த பகுதியெங்கும் ஒரு நாளெல்லாம் அலைந்துதிரியவேண்டிவந்தது. அங்கு நிறைந்திருக்கின்ற திராட்சைத் தோட்டங்களில் வேலைசெய்கிறவர்களை பார்க்கின்ற போது அந்னியமும், சூழல் மாறுபாடும் தோற்றமயக்கத்தை ஏற்படுத்தியது. காரணம், தனி வெள்ளையர்பிரதேசமானஅங்கு வேலை செய்பவர்களெல்லாம் கறுப்பினத்தவர்களாக இருந்தார்கள். நான்அவர்களுடன் பேச, தயக்கத்துடன் என்னிடம் பேசினார்கள்.

“காலை ஐந்து மணிக்கு வேலை ஆரம்பமானால் இரவு எட்டுமணி வரை தொடரும். பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்துஅக்டோபர் கடைசி வாரம் வரை வாரத்தில்ஏழு நாட்களும் வேலை. பண்ணையின்ஒதுக்குப்புறமாக இருக்கும் கன்டைனருக்குள்தான், கடும் குளிரிலும், கொடும்வெயிலிலும், எங்கள் உறக்கம். ஒருகோப்பி குடிக்கவும், கூட வேலை செய்பவனிடம் சிரித்துப்பேசவும் தடை. இத்தனையையும் உறுத்து, நாங்கள் ஏழு மாதத்தில்பெறுகிற சம்பளம் - மூவாயிரம் டாலர்கள்.”
“எங்கள் காலிலிருந்து எழும்புகின்ற‘சிலீங்’, ‘சிலீங்’ சத்தம் மட்டும் தான் இல்லாமல் போய் இருக்கிறது. மற்றபடி அறுநூறு ஆண்டுகளாக எங்கள் வாழ்க்கைமாறவேயில்லை.”அவர்கள் வேதனை திராட்சை ரசத்தின் சுவையில் கலந்திருந்தது.

அந்த திராட்சை தோட்டங்களில்வேலை செய்பவர்கள் எல்லோரும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜமேக்காவில்இருந்து கூலிகளாக இறக்குமதி செய்யப்படுகின்ற கறுப்பினத்தவர்கள். முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய கரும்புக் காட்டு சோகம், பலதலைமுறைகளை கடந்தும் இன்னமும் அவர்களை விட்டகலவில்லை.

துப்பாக்கிகளோடு ஆப்பிரிக்காவிற்குவெள்ளையர்கள் போன நாளில் இருந்துகறுப்பர்களின் இரத்த வரலாறு ஆரம்பமாகிறது. வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப் பட்டதாக சொல்லப்படுகின்ற அட்லாண்டிக்மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் இருக்கின்ற நாடுகளும், தீவுகளும் சங்கிலியிட்டுகட்டி இழுத்து வரப்பட்ட கறுப்பு அடிமைகளாலேயே செம்மை அடைந்தது என்பதுவும், வெள்ளையர்களின் உணவுத்தேவையும், கஜானா நிறைவும், கறுப்பர்களின் இரத்தமும், கண்ணீரும் என்பதுவெள்ளையர் சரித்திரத்தின் கறுப்பு பக்கங்கள்.
வெள்ளையர் அரசு 1838ஆம் ஆண்டில்அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தது. ஆனால் அதே அரசு, அதேஆண்டில், ஒப்பந்த முறைச் சட்டத்தைகொண்டு வந்து சங்கிலியால் பிணைக்காதஅடிமைமுறையை உலகெங்கும் பரப்பியது.

ஒப்பந்த அடிமைக் கறுப்பு கூலித் தொழிலாளிகள் அடிமை முறையில் வேலை செய்வதை நீங்கள் கோடைகாலம் முழுவதுவும்ஏiநெ டுயனெ என்று சொல்லப் படுகின்றNயைபயசய ழுn வாந டுயமந பகுதிக்கு சென்றால் பார்க்கலாம்.
எழுதாத ஆங்கிலேய சட்டங்களிலும்,வெள்ளைத்திமிர் இரத்தத்திலும் இன்னமும்கறுப்பர்கள் மீதான கொடும் பார்வைகள்நீங்கிய பாடாக இல்லை. அமெரிக்காவின்போலீஸ் மோப்ப நாய்கள் கறுப்பர்களைதுரத்தி வேட்டையாடிப் பிடிக்க கூடியமுறையிலேயே பயிற்றப்படுவதாக சொல்லப்படுகிறது.

இயற்கை அழிவுக்கு உட்படும் என்றுதெரிந்தும் கடல் மட்டத்தை விட தாழஉள்ளது என்று பகிரங்கமான பின்னும்அலபாமா பகுதியில் கறுப்பினத்தவர்களை குடியேற்றியதும் ‘கத்தரீனா’ அழிவுக்குபின்அமெரிக்கஅரசு நடந்து கொண்ட விதமும்மனித குரூரத்தின் பெருநிலை.
எய்ட்ஸ் கிருமிகள் மனித குரங்கில்இருந்து வந்ததல்ல. வெள்ளையர்கள்சொல்வது போன்று அது கறுப்பர்களுக்குகடவுள் தந்த தண்டனையும் அல்ல.எய்ட்ஸ் கிருமி அமெரிக்காவின் ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரியல்ஆயுதம். அக்கிருமியினை தடுப்ப+சிகளில்புகுத்தி உதவி என்னும் பேரில் ஆபிரிக்கமக்களிடம் பரிசீலித்து விட்டது அமெரிக்கா,என்னும் குற்றச்சாட்டைச் சொன்னவர் 2004ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கறுப்பின பெண்ணான வங்தாரி மாத்தாய்.

மனிதனேய அமைப்புகளும் ஐ.நா. சபையினரும் இவரது குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்தாமல் இருப்பது கறுப்பினத்தவர்மீதான அக்கறையின்மை என்று கொள்ளலாமா?
எண்ணை வயல்களினால் நைஜ்ஜீரியாவின் சுற்றுப்புறச் சூழல் நாசமாகிக் கொண்டிருப்பதை தடுக்க முற்படும் இயற்கை ஆவலர்களை வெள்ளை முதலாளிகளின்பினாமிகள் இன்றுவரை கொன்று குவித்துக்கொண்டு இருப்பதை ஏன் பச்சைப் பாதுகாப்பு இயக்கத்தினர் பெரிதுபடுத்தவில்லை.

ஆதி மனிதரை, ஆதியிலேயே நாகரிகம்கண்டவரை ஆதி அரசரை உலகின் மற்றைய குடிகள் ஏன் மதிக்க மறுக்கின்றன?அவர்கள் வாழ்விடம் இருண்ட கண்டம்என்று எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது? இத்தனையையும் செய்துகொண்டு பிப்ரவரியை கறுப்பு மாதமாக ஏன்நினைவு கூருகிறார்கள்?சரி - கறுப்பு நிற திராவிடத் தமிழர்மனதில் என்ன நினைத்துக்கொண்டு காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சென்றும்,கறுப்பானாலும் கஸ்தூரியென்றும் பழமொழி சொன்னார்கள்?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது